அமெரிக்க ஜனாதிபதிக்கும் வடகொரிய தலைவருக்கும் இடையிலான சந்திப்பு அடுத்த சில வாரங்களில் இடம்பெறலாம் என வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

வடகொரிய பிரதிநிதியொருவரை டிரம்ப் வெள்ளை மாளிகையில் சந்தித்த பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது

பெப்ரவரி இறுதியில் வடகொரிய ஜனாதிபதியை சந்திப்பது குறித்து  ஜனாதிபதி டிரம்ப் ஆர்வமாகவுள்ளார் என  டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ள வெள்ளை மாளிகை பேச்சுவார்த்தைகள் எங்கு இடம்பெறும் என்பதும் திகதியும் பின்னர் வெளியிடப்படும் என குறிப்பிட்டுள்ளது.

வடகொரியாவின் அணுவாயுதங்களை கைவிடும் நடவடிக்கைகள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ள வெள்ளைமாளிகையின் ஊடக செயலாளர் வடகொரிய மீதான அமெரிக்காவின் அழுத்தங்களும் தடைகளும் தொடரும் எனவும் குறிப்பிட்டுள்ளார்