சிறையிலிருந்த கைதி ஒருவருக்கு உணவுப் பொதியுடன் ஹெரோயின் போதைவஸ்து மற்றும் சிகரட்டுக்களை வழங்கிய, கைதியின் தந்தையை சிறைக் காவலர்கள் கைது செய்துள்ளனர்.
சிறையிலிருந்த கைதி ஒருவருக்கு உணவுப் பொதியுடன் ஹெரோயின் போதைவஸ்து மற்றும் சிகரட்டுக்களை வழங்கிய, கைதியின் தந்தையை சிறைக் காவலர்கள் கைது செய்துள்ளனர்.
மெதகமை சிறையிலிருந்த கைதி ஒருவருக்கே, உணவுப் பொதியுடன் மேற்படி பொருட்கள் வழங்கப்பட்டமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் இன்று சனிக்கிழமை (19-01-2019) முற்பகல் இடம்பெற்றுள்ளது. பலாத்கார பாலியல் வல்லுறவு மற்றும் திருட்டு ஆகிய குற்றச்சாட்டுக்களின் பேரில், சிறை வாசம் அனுபவித்து வந்த கைதிக்கு, அவரது தந்தை உணவுப் பொதியுடன் சிகரட்டுக்கள் ஐந்து, தீப்பெட்டி ஒன்று ஆகியவற்றை மறைத்து, மிகவும் சூட்சுமமான முறையில் வழங்கியுள்ளார்.
அப்பொதியை சிறைக்காவலர்கள் பிரித்து, பரிசோதித்த போது உணவுப் பொதியுடன் 25 மில்லிகிராம் எடையுள்ள ஹெரோயின் போதைவஸ்து, ஐந்து சிகரட்டுக்கள், ஒரு தீப்பெட்டி ஆகியவற்றை கண்டுபிடித்து, அப்பொதியை வழங்கிய கைதியின் தகப்பனைப் பிடித்து, மெதகமை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்த கைதியின் தகப்பனை விசாரணைக்குட்படுத்திய பின் அந்நபரை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்செய்ய நடவடிக்கை எடுப்பதாக, மெதகமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜானக்க விதானராய்ச்சி தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM