சில தரப்பினர் முதலில் மாகாண சபைத் தேர்தலே நடத்த வேண்டும் என கோருகின்ற போதும், ஜனாதிபதித் தேர்தலையே முதலில் நடத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம வலியுறுத்தியுள்ளார்.

நாட்டில் நிலவிய அரசியல் நெருக்கடி முடிவுக்கு வந்துள்ள நிலையில் ஒன்பது மாகாண சபைகளுக்குமான தேர்தலை ஒரே தடவையில் முதலில் நடத்த வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ள கருத்து தொடர்பில் வினவிய போதே, பாராளுமன்ற உறுப்பினரான குமாரவெல்கம மேற்கண்டவாறு தெரிவித்தார்.