அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்பிற்கு சார்பாக ரஸ்யா செயற்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் தன்னிடமுள்ளதாக தெரிவித்த மொடல் அழகியை ரஸ்ய அதிகாரிகள் கைதுசெய்யதுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன

தாய்லாந்திலிருந்து நாடு கடத்தப்பட்ட நஸ்டியா ரைபகா என அழைக்கப்படும் இந்த மொடல் அழகியை மொஸ்கோ விமானநிலையத்தில் அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

மொடல் அழகி கைதுசெய்யப்படுவதை காண்பிக்கும் வீடியோவை அவரது சட்டத்தரணி சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார்.

பெண்ணொருவர் போராடுவதையும் நால்வர் அவரை சக்கரநாற்காலியில் அமரச்செய்து இழுத்துச்செல்வதையும் காண்பிக்கும் வீடியோவை மொடலின் சட்டத்தரணி வெளியிட்டுள்ளார்

வேறு நாடு ஒன்றிற்கு செல்வதற்காக டிரான்சிட் பகுதியில் நின்றிருந்த மொடல் அழகியை ரஸ்ய அதிகாரிகள் இழுத்துச்சென்றனர் என அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்

இது ஒரு சர்வதேச சதி என அவர் குறிப்பிட்டுள்ளார்

இதேவேளை விபச்சாரநடவடிக்கையில் ஈடுபடமுயன்றவேளை மொடல் அழகியும் வேறு சிலரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என ரஸ்ய ஊடகங்கள்  தெரிவித்துள்ளன

ரஸ்ய அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்ட மொடல் அழகி தாய்லாந்தில் பாலியல் குற்றச்சாட்டுகளின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

அவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருந்த தான் ரஸ்யாவிற்கு நாடு கடத்தப்படலாம் என அச்சம் வெளியிட்டிருந்த அவர் அமெரிக்க தூதுரகத்தில் தஞ்சம் பெற முயன்றிருந்தார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஸ்யா டிரம்ப் சார்பில் தலையிட்டமைக்கான ஆதரங்கள் என்னிடம் உள்ளன என அவர் குறிப்பிட்டிருந்தார்.