லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை நுவரெலியா பிரதான வீதியினை இனைக்கும் பெயார்வெல் தோட்டபாதையில் அமைந்துள்ள தோட்டத்தில் பிரதான பாலத்தினை புனரமைத்துத் தருமாறு கோரி சுமார் 500க்கும் மேற்பட்ட தோட்ட மக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த பாலத்தினூடாக நாளாந்தம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பயணம் செய்வதுடன் சுமார் நூற்றுக்கணக்கான வாகனங்கள் இந்த பாலத்தினை பயன்படுத்தியே பயணம் செய்கின்றனர். ஆனால் குறித்த பாலம் இரண்டு வருட காலமாக உடைந்து அபாயகரமான நிலையில் காணப்படுவதாகவும், இதில் உயிராபத்துக்கள் ஏற்படக்கூடிய ஆபத்துகள் காணப்படுவதாகவும் ஆர்ப்பாட்டம் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை இந்த பாலத்தினூடாக சுமார் நூற்றுக்கணக்கான பாடசாலை மாணவர்கள் பாடசாலைக்கு செல்லும் போது ஒதுங்குவதற்கு வழியின்றி பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
அத்தோடு உரிய நேரத்திற்கு பாடசாலைகளுக்கு செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளதாகவும் நாளாந்தம் வேலைக்கு செல்பவர்களும் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் பாலத்தினூடாக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இப்குதியில் வசிப்பவர்கள் தெரிவிக்கினறனர்.
குறித்த பாலத்தினை புனரமைத்துத்து தருமாறு அரசியல்வாதிகளிடமும் பொறுப்பு வாய்ந்தவர்கள் அதிகாரிகளிடமும் தெரிவித்துள்ள போதிலும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என இவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்
எனவே ஆபத்தான நிலையில் உள்ள இந்த பாலத்தினை உயிராபத்து ஏற்படுவதற்கு முன் பொறுப்பு வாய்ந்தவர்கள் புனரமைத்து தர வேண்டும் என இவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதுகுறித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கருத்து தெரிவிக்கையில்,
பெயார்வெல், ரத்னகிரி கொலனி, லெமிலியர் கொலனி ஆகிய 3 பகுதிகளை சேர்ந்த 1500க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 3000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இந்த பாலத்தினை பயன்படுத்துகின்றனர்.
ஆனால் 1998 ஆம் ஆண்டு இந்த பாலம் செய்து கொடுக்கப்பட்டு கடந்த சில 02 வருடங்களாக இந்த பாலம் துருப்பிடித்து பல இடங்களில் உடைந்து காணப்படுகின்றன. பலர் நோய்வாய்ப்படும் போது இந்த பாலத்தினை பயன்படுத்தி கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
ஆனால் இந்த பாலம் உடைந்து இருப்பதனால் நோயாளர்களை கொண்டு செல்ல முடியாது நிலை ஏற்பட்டுள்ளது. அத்தோடு விவசாயம் செய்பவர்கள் தங்களது உற்பத்திகளை சந்தைகளுக்கு கொண்டு செல்ல முடியாத நிலையும் உள்ளதாகவும், அதிகாலையில் தொழிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM