யாழ்பபாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற நகர் சேர் கடுகதி புகையிரதத்துடன் மோதுண்டு 50 வயது மதிக்கத்த ஆண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பணத்தில் இருந்து நேற்றையதினம் 1.30 மணயளவில் கொழும்பு நோக்கி புறப்பட்டுச் சென்ற நகர்சேர் கடுகதி குளிரூட்டப்பட்ட புகையிரதத்துடன் மோதியே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
அரியாலை, நாவற்குழி பகுதிகளுக்கு இடைப்பட்ட பகுதியில் வயல்வெளிகளுக்கு ஊடாக சென்று கொண்டிருந்த போது, குறித்த வயல்வெளிகளின் ஊடாக வந்த நபர் ரயில் தண்டவாளத்தை கடக்க முற்பட்டுள்ளார்.
இதனை அவதானித்த ரயில் சாரதி ஒலி எழுப்பியபோதும், குறித்த நபர் ரயிலுடன் மோதுண்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதனையடுத்து உயிரிழந்தவரின் சடலத்தை குறித்த ரயிலில் ஏற்றபட்டு நாவற்குழி புகையிரத நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதுடன், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தைக் மீட்டு தற்கொலையா, விபத்தா என்ற கோணத்தில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM