சூரிய ஒளியின் மூலம் 20 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய எதிர் பார்த்து  இருப்பதாக இந்தியாவின் மத்திய மந்திரி பியூஸ் கோயல் கூறினார். 

இந்தியாவில் அடுத்த ஆண்டுக்குள் சூரிய ஒளியின் மூலம் 20 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு  இருப்பதாகவும், அந்த இலக்கை எட்டும் வகையில் சூரிய ஒளி மின் உற்பத்திக்கான திட்டங்கள் தொடங்கப்பட்டு இருப்பதாகவும் மத்திய மின்சார துறை ராஜாங்க மந்திரி பியூஸ் கோயல்  தெரிவித்தார். 

 நாட்டில் சூரிய ஒளி மின்உற்பத்தியை  2022-ம் ஆண்டுக்குள் ஒரு லட்சம் மெகாவாட் உற்பத்தி செய்ய பிரதமர் மோடி விரும்புவதாகவும் பியூஸ் கோயல் கூறினார்.