பொருளாதார நிலையில் பின்தங்கிய பொதுபிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க மனு தாக்கல் செய்துள்ளது.

தி.மு.கவின் அமைப்பு செயலாளரான ஆர் எஸ் பாரதி பொது பிரிவில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு பத்து சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுவதை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் தாக்கல் செய்திருக்கும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

“இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்பு திட்டம் அல்ல.பொது பிரிவினருக்கு பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு அளிப்பது என்பது இயற்கை நீதிக்கும் அரசமைப்பு சட்டத்திற்கும் எதிரானது. இந்த பத்து சதவீத இடஒதுக்கீட்டால் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கும் இதர பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கும் கல்வி வேலைவாய்ப்பில் அளிக்கப்பட்டு வரும் இடஒதுக்கீடு பாதிக்கப்படும்.

தமிழகத்தில் ஏற்கனவே 69 சதவீத இடஒதுக்கீடு உள்ள நிலையில் மேலும் பத்து சதவீதம் என்பது இட ஒதுக்கீட்டின் அளவை 79 சதவீதமாக மாற்றிவிடும். 

அதனால் இந்த புதிய பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்து. அதற்கான சட்டம் செல்லாது என்று அறிவிக்கவேண்டும் ”என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.