ஆட்ட நிர்ணய சதியுடன் தொடர்புபட்ட சிலர் தன்னை அணுகியமை குறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ ஐ.சி.சி.யிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

ஆட்ட நிர்ணய சதி கும்பல்களை சேர்ந்த சிலர் என்னை தொடர்பு கொண்டனர்  என தெரிவித்துள்ள அமைச்சர்,  அவர்கள் இலங்கை வீரர்களை ஆட்டநிர்ணய சதியில் ஈடுபடுவத்துவதற்கு நான் முன்வந்தால் எனக்கு  இலஞ்சம் தருவதற்கு தயார் என குறிப்பிட்டனர் எனவும் தெரிவித்துள்ளார்.

நான் இது குறித்து ஏற்கனவே ஐ.சி.சி.யின் ஊழல் ஒழிப்பு பிரிவின் தலைவர்  அலெக்ஸ் மார்சலிடம் முறைப்பாடு செய்துள்ளேன் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நான் இதனை ஐ.சி.சி. அதிகாரியிடம் தெரிவித்தவேளை அவர் அதிர்ச்சியடைந்தார் என  ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

இது குறித்து நானும் அதிர்ச்சியடைந்துள்ளேன் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.