போதைப்பொருளிற்கு எதிரான யுத்தம்- சிறிசேனவின் கருத்திற்கு கடும் கண்டனம்

Published By: Rajeeban

19 Jan, 2019 | 09:00 AM
image

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் போதைப்பொருளிற்கு எதிரான யுத்தத்தை பின்பற்றப்போவதாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருத்து வெளியிட்டுள்ளமை குறித்து மனித உரிமை அமைப்புகள் எச்சரிக்கை வெளியிட்டுள்ளன.

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் போதைப்பொருளிற்கு எதிரான யுத்தம் மனித உரிமை பேரழிவு என தெரிவித்துள்ள சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் பிலிப்பைன்சிற்கான ஆராய்ச்சியாளர் கார்லொஸ் கொன்டே, உலகின் எந்த நாடும் இதனை பின்பற்றக்கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருள் விவகாரத்தை வெறுமனே குற்றச்செயலாக மாத்திரம் கருதி முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள்களிற்கு எதிரான யுத்தங்களால் அவற்றிற்கு தீர்வை காணமுடியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாறாக போதைப்பொருளிற்கு எதிரான யுத்தம் சொல்லொண துயரத்தையும்,சட்டத்தின் ஆட்சியின் அழிவையும் மனித உரிமைகளில் வீழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியை பின்பற்றுவது குறித்து சிறிசேன உறுதியாக உள்ளார் என்றால், அவர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் விசாரணைகளை எதிர்கொள்ள தயாராகவேண்டும் என பிலிப்பைன்ஸின் மனித உரிமை அமைப்பான ஐ டிவென்ட் தெரிவித்துள்ளது.

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

பிலிப்பைன்ஸின் முன்மாதிரியை பின்பற்ற வேண்டாம் என ஆசிய நாடுகளின் தலைவர்களிற்கு நாங்கள் எச்சரிக்கை விடுக்கின்றோம் என ஐ டிபென்ட் அமைப்பின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் விவகாரத்திற்கு ஜனநாயக கட்டமைப்புகளை அழிக்காத மாறாக பலப்படுத்தும் உரிமைகளை அடிப்படையாகக் கொண்ட ஆட்சி மூலம் தீர்வை காணமுயல வேண்டும் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19