வவுனியா சிறைச்சாலை கைதி ஒருவர் வவுனியா பொதுவைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில்  சிகிச்சை பலனின்றி இன்று மாலை மரணமடைந்துள்ளார். 

இவ் விடயம் குறித்து மேலும் தெரியவருவதாவது, 

ஹெரோயின் கடத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு  வவுனியா சிறைச்சாலையில் சிறைவாசம் பெற்று வந்த கொழும்பு மருதானையைச் சேர்ந்த  41 வயதுடைய கேசவன் சசிகுமார் என்ற நபர்  இன்று (18.01.2019) மதியம் ஒரு மணியளவில் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 

இந்நிலையிலேயே குறித்த நபர் சிகிச்சை பலனின்றி இன்று மாலை வைத்தியசாலையில் இறந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலதிக விசாரணைகளை மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டு வருகிறார்.