சவூதியில் நிர்க்கதியாகியுள்ள பெண்களை மீட்க விரைவில் நடவடிக்கை - அப்புஹாமி 

By Priyatharshan

18 Jan, 2019 | 05:57 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

சவூதியில் நிர்க்கதி நிலையில் பெண்கள் நலன்புரி நிலையத்தில் தங்கி இருக்கும் இலங்கைப் பணிப் பெண்களின் பிரச்சினை தொடர்பில் ஒருவாரத்துக்குள் தீர்வுகாண நடவடிக்கை எடுப்போம் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு கண்காணிப்பு அமைச்சர் ஹெட்டர் அப்புஹாமி தெரிவித்தார்.

 அத்துடன் ஆள் கடத்தல்களில் ஈடுபடும் முகவர் நிறுவனங்களை நிரந்தரமாக தடைசெய்யும் உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சவூதியில் இலங்கைப் பெண்கள் சிலர் நலன்புரி நிலையத்தில் நிர்க்கதியான நிலையில் இருப்பது தொடர்பில்  சமூகவலைத்தளம் மற்றும் வேறு ஊடகங்களில் காணொளிகள் பிரசுரமாகி வருகின்றன. 

இதுதொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இடம்பெற்றது. 

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right