பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் சுயசரிதை நூல் சீனமொழியில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது.

சம்பத் பண்டார என்பவரால் எழுதப்பட்ட அந்த சுயசரிதையை சீனப் பேராசிரியர்கள் வான் யூவும் ஜின் ஷின்யின்னும் சேர்ந்து மொழிபெயர்த்திருக்கிறார்கள்.சரசவிய பிரசுராலயம் பெயாஜிங்கில் உள்ள யான்சின் பப்ளிசேர்ஸுடன் இணைந்து நூலை பிரசுசித்திருக்கிறது.

நூலின் பிரதி இன்று வெள்ளிக்கிழமை அலரிமாளிகையில் வைத்து பிரதமரிடம் கையளிக்கப்பட்டது. 

இலங்கையின் அரசியல் தலைவர் ஒருவரின் சுயசரிதை சீனமொழியில் வெளிவந்திருப்பது இதுவே முதற்தடவையாகும்.