(நா.தனுஜா)

அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் சிறைக்கைதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் ஊடகங்களால் வெளியிடப்பட்டுள்ள செய்திகள் மற்றும் காணொளிகள் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம் செலுத்தியுள்ளது. 

அதன்படி விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், அவ்வறிக்கைகளை விரைவில் வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் சிறைக்ககைதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் தொடர்பிலேயே இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மேற்கண்ட கருத்தினை வெளியிட்டுள்ளது.