(எம்.மனோசித்ரா)

புதிய முறைமையில் தேர்தலை நடத்த முடியாத நிலைமையே தற்போது காணப்படுகின்றது. எனவே விரைவில் தேர்தலை நடத்த வேண்டுமாயின் பழைய முறைமையில் நடத்துவது சாத்தியமாகும் என தெரிவித்த சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய , தேர்தல்கள் நடாத்தப்படாமை தனிப்பட்ட ரீதியில் கவலையளிப்பதாகவும் குறிப்பிட்டார். 

மாகாண சபைத் தேர்தல்கள் விரைவில் நடத்தப்பட வேண்டுமெனக் கோரியும், அதற்காக முன்னெடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடுவதற்கு சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவில் அதன் தலைவரை கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் சந்தித்திருந்தனர். 

அந்தக் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.