“ தேர்தலை பிற்போட்டமையை சர்வதேச கிரிக்கெட் சபை எதிர்க்கவில்லை” 

Published By: Daya

18 Jan, 2019 | 05:50 PM
image

(நெவில் அன்தனி)

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிருவாக சபைத் தேர்தல் பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதிவரை பிற்போடப்பட்டமையை சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி.)எதிர்க்கவில்லை என தொலைத்தொடர்புகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளரும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தகுதிவாய்ந்த அதிகாரியுமான சூலானந்த பெரேரா தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிருவாக சபைத் தேர்தல் பிற்போடப்பட்டமைக்கான காரணத்தை ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் விளையாட்டுத்துறை அமைச்சின் கேட்போர்கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை (18.01.2019) பிற்பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது எழுப்பப்ட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தேர்தல் பிற்போடப்பட்டமை குறித்து சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு அறிவிக்கப்பட்டபோது பேரவையின் நிலைப்பாடும் பதிலும் எவ்வாறு இருந்தது எனக் கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த சூலானந்த பெரேரா,

 ‘‘ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிருவாக சபைத் தேர்தல் பிற்போடப்பட்டமைக்கான சட்டரீதியான காரணங்களை தெளிவு படுத்தினோம். இது குறித்து பேரவையினருக்கும் எமக்கும் இடையில் சுமுகமான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதனை அடுத்து தேர்தல் பிற்போடப்பட்டதற்கான காரணங்களை அவர்கள் ஏற்றுக்கொண்டனர்’’ எனக் கூறினார்.

இந்த ஊடவியலாளர் சந்திப்பில் தேசிய விளையாட்டுத்துறை பேரவை உறுப்பினர்களில் ஒருவரான சட்டத்தரணி பண்டுக கீர்த்தினந்தவும் பங்குபற்றினார்.

அங்கு தொடர்ந்து பெசிய சூலானந்த பெரேரா, 

‘‘ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிருவாக சபைத் தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி நடைபெறவிருந்தது. இந்தத் தேர்தல் குறித்து மிகுந்த எதிர்பார்ப்புடன் இருப்பவர்கள் மத்தியில் ஒரு குழப்பம் தோன்றியுள்ளது. 

இத் தேர்தலை நாங்கள் இரத்துச் செய்துவிட்டோம் அல்லது காலவறையரையின்றி பிற்போட்டுவிட்டோம் என பரப்பப்பட்ட செய்திகள் காரணமாகவே இந்தக் குழப்பம் தோன்றியுள்ளது. 

இது குறித்து ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தவே இந்த ஊடக சந்திப்பு நடத்தப்படுகின்றது.

 ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிருவாக சபைத் தேர்தல் விளையாட்டுத்துறை யாப்புக்கு அமையவே நடத்தப்படுகின்றது. இந்த யாப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள ஷரத்துகள் அந்தந்த காலத்துக்கு தேவைப்படும் வகையில் திருத்தப்படுகின்றது. 

2017 செப்டெம்பர் 22 ஆம் திகதியிடப்பட்ட வர்த்தமானியில் மேன்முறையீட்டுக் குழு தொடர்பாக அளிக்கப்பட்ட விளக்கம் இரண்டு மொழிகளில் இரண்டு விதமாக இருந்ததை விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளராகவும் (டிசம்பர் 24) பின்னர் கிரிக்கெட் நிறவனத்தின் தகுதிவாய்ந்த அதிகாரியாகவும் (டிசம்பர் 31) நான் பதவியேற்றபின்னர் வர்த்தமானி மொழிபெயர்ப்பில் பரஸ்பர வேறுபாடு இருப்பது கண்டறியப்பட்டது. 

அதாவது கிரிக்கெட் தேர்தல் மேன்முறையீட்டுக் குழு நியமிக்கப்படும்போது ஆங்கில மொழியில் குறிப்பிடப்பட்டிருந்த ஓய்வுபெற்ற நீதிபதி என்ற சொல்லில் ஓய்வுபெற்ற என்ற பதம் சிங்கள மொழிபெயர்ப்பில் இருக்கவில்லை. 

இக் குழுவினர்தான் இந்தத் தேர்தலில் பிரதானமானவர்கள். இத்தகைய பரஸ்பர வேறுபாடுகளுக்கு மத்தியில் கிரிக்கெட் தேர்தல் நடத்தப்பட்டால் ஏதாவது ஒரு சூழ்நிலையில் பிரச்சினைகள் எழலாம் என்பதால் சட்ட மாஅதிபரிடம் எழுத்து மூலம் ஆலோசனை கோரினோம்.

 இதற்கு 2019 ஜனவரி 8 ஆம் திகதி பதிலளித்த சட்ட மாஅதிபர் இந்த பரஸ்பர வேறுபாட்டை நிவர்த்தி செய்தபின்னரே ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிருவாக சபைத் தேர்தலை நடத்தவேண்டும் என்ற ஆலோசனையை வழங்கினார். 

இதனைத் திருத்திய பின்னர் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டோம். இவை  குறித்தும் சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு அறிவித்தோம். இதனை அடுத்து வேட்பு மனுக்களுக்கு எதிராக ஆட்சேபங்கள் சமர்ப்பிப்பதற்கு வேட்பு மனு தாக்கல் செய்த தினத்திலிருந்து இரண்டு வாரங்கள் வழங்கப்படுவது நியதி. எனவே தான் தேர்தல் நடத்தப்படவிருந்த பெப்ரவரி 7ஆம் திகதியிலிருந்து இரண்டு வாரங்கள் கழித்து பெப்ரவரி 21 ஆம் திகதி தேர்தலை நடத்த தீர்மானித்தோம். அன்றைய தினம் சட்ட விதிகளுக்கு அமைய நியாயமான தேர்தலை நடத்துவோம்’’ என்றார். 

இதேவேளை ஏற்கனவே நியமிக்கப்பட்டிருந்த மேன்முறையீட்டு குழு நீக்கப்பட்டு விளையாட்டுத்துறை அமைச்சரினால்  கடந்த 14 ஆம் திகதி புதிதாக நியமிக்கப்பட்ட  மூவர் அடங்கிய மேன்முறையீட்டுக் குழுவினர் மேன்முறையீடுகள் குறித்து ஆராய்ந்து முடிவுகளை அறிவிப்பதற்கே 14 நாட்களால் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவினால் நியமிக்ப்பட்ட புதிய மேன்முறையீட்டுக் குழுவில் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி நிமால் திசாநாயக்க, ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி தேவிகா தென்னக்கோன், ஓய்வுபெற்ற மேலதிக சுங்க பணிப்பாளர் நாயகம் தர்மசேன கஹதவ ஆகியோர் இடம்பெறுகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41