மஹிந்த  ராஜபக்ஷ  தொடர்ந்து  எதிர்க்கட்சி  தலைவர்  பதவியில் செயற்பட மாட்டார். விரைவில்  ஆட்சியதிகாரமிக்க   பதவியில் மக்களால்  அமர்த்தப்படுவார்   என்று    பாராளுமன்ற உறுப்பினர்   உதய கம்மன்பில தெரிவித்தார்.

மாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் விரைவாக நடத்த தேவையான அனைத்து  நடவடிக்கைகளையும்  எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து முன்னெடுத்து  செல்வோம் எனவும் அவர் தெரிவித்தார்.எதிர்க்கட்சி  தலைவர்   அலுவலகத்தில்  இன்று வெள்ளிக்கிழமை  இடம்பெற்ற ஊடகவியலாளர்   சந்திப்பில்   கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே  அவர்  மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.