ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்=2 படத்தின் படபிடிப்பு இன்று சென்னையில் ஆரம்பமானது.

1996 ஆம் ஆண்டில் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் , சுகன்யா, மனிஷா கொய்ராலா, ஊர்மிளா மடோன்கர், கவுண்டமிணி, செந்தில் ஆகியோரது நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற படம் இந்தியன். 22 ஆண்டுகளுக்கு பிறகு அந்த படத்தின் அடுத்த பாகத்திற்கு திரைக்கதை அமைத்து இயக்குகிறார் ஷங்கர்.

இயக்குநர் ஷங்கர் தன்னுடைய படங்களில் எழுத்தாளர்களை கதை விவாதத்திற்கும், திரைக்கதை எழுதுவதற்கும், வசனம் எழுதுவதற்கும் பயன்படுத்துவார். எழுத்தாளர்கள் சுஜாதா, பாலகுமாரன், சுபா, ஜெயமோகன், கபிலன் வைரமுத்து உள்ளிட்ட பலரை பயன்படுத்தியிருக்கிறார். அந்த வகையில் இந்த இந்தியன்=2 படத்தில் எழுத்தாளர்கள் ஜெயமோகன், கபிலன் வைரமுத்து மற்றும் லட்சுமி சரவணகுமார் ஆகியோரை பணியாற்ற வைத்திருக்கிறார்.

இன்றைய சமூகத்தில் புரையோடிய போன லஞ்சம் என்ற காரணியை முழுவதுமாக மக்களின் மனதிலிருந்து அகற்றுவதற்காக அல்லது அது குறித்து மாற்று சிந்தனையை மக்களின் மனத்தில் விதைப்பதற்காக இந்தியன்=2 படம் தயாராகிவருவதாக தெரிவிக்கிறார்கள் படக்குழுவினர்.

குறித்த படத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த் ஆகியோர் நடிக்கிறார்கள். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய,  அனிரூத் இசையமைக்கிறார்.

குறித்த படத்தின் படபிடிப்பு இன்று சென்னையில் ஆரம்பத்தாக இப்படத்தினை தயாரிக்கும் லைகா நிறுவனம் தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறது.

இதனிடையே கமல்ஹாசன் நடிப்பில் தயாரான சபாஷ் நாயுடு படம் ஏறக்குறைய கைவிடப்படும் சூழல் ஏற்பட்டதால், அதற்கு பதிலாக லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தியன்=2 படத்தில் கமல் நடிக்கிறார் என்று திரையுலகினர் தெரிவிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.