(நா.தினுஷா) 

நாடுமுழுவதுமுள்ள விசேட அபிவிருத்தி தேவையுடைய அனைத்து பிரதேசங்களுக்கும் துரிதமான அபிவிருத்தியினை பெற்றுக்கொடுத்து, குறுகிய காலத்தில் பிரதேச அபிவிருத்திகளுக்கு தேவையான சகலவித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும். 

அத்துடன் குறுகியகாலத்தில் மக்களின் தேவைகளை வெகுவிரைவில் நிறைவேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 

விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சு பொறுப்பினை இன்று வெள்ளிக்கிழமை ஏற்றதன் பின்னர் ஏற்பாடு செய்ப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.