(எம்.மனோசித்ரா)

கண்டி, அளவத்துகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்குரணை பிரதேசத்தில் அலவத்துகொட பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய அனுமதிப்பத்திரமின்றி லொறியொன்றில் கால்நடைகளை ஏற்றிச் சென்ற சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இவ்வாறு செய்யப்பட்டுள்ளவர் 36 வயதுடையவர் எனவும், ஜம்புகஹாபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

கால்நடைகளை கொண்டு செல்வதற்கான எந்தவித பாதுகாப்பும் அற்ற நிலையில் அவற்றின் கால்களை கட்டி, துணியால் மூடி அவை கொண்டு செல்லப்பட்டுள்ளன. 

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 23 ஆம் திகதி கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.