(இராஜதுரை ஹஷான்)

 வடக்கு  பிரதேசத்திற்கு  மாத்திரம்   வரையறுத்துக் காணப்பட்ட  எதிர்க்கட்சித்   தலைவர்  பதவி   இன்று  முழு  நாட்டுக்கும்  உரித்துடையதாயிற்று என்று மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இனி   பாராளுமன்றத்தில்  அனைத்து பிரதேச  மக்களின்  அடிப்படை   பிரச்சினைகள்  தொடர்பில்  குரலெழுப்பப்படும்.   அரசாங்கத்தின்  முறையற்ற  செயற்பாடுகளை  தட்டிக் கேட்கும்  பொறுப்பு  வாய்ந்த  எதிர்கட்சி   இன்று  உருவாக்கப்பட்டுள்ளது  என   எதிர்க்கட்சி   தலைவர்  மஹிந்த  ராஜபக்ஷ  தெரிவித்தார்.

எதிர்க்கட்சி  தலைவர் அலுவலகத்தின்   கடமைகளை   இன்று வெள்ளிக்கிழமை  பொறுப்பேற்றதன்  பின்னர்  ஊடகங்களுக்கு    கருத்துரைக்கும்  போதே   அவர்  மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.

அவர்  மேலும்  குறிப்பிடுகையில்,

வடக்கு,  உட்பட  அனைத்து   மாகாணங்களின்  அடிப்படை  பிரச்சினைகள் ,   மக்களின்   வாழ்வியல்  பிரச்சினைகள்  தொடர்பில்  இனி  எவ்வித   வேறுபாடுகளுமின்றி  எடுத்துரைக்கப்படும்.  

மக்களின்  பிரச்சினைகள்  பற்றி  எதிர்க்கட்சி  என்ற   நிலையில் இருந்து   சுட்டிக்காட்டாமையின்  விளைவே  அரசாங்கம்   தான்தோன்றித்தனமாக  செயற்பட  வழியேற்படுத்தியுள்ளது என்றார்.