எத்தியோப்பியாவில் வீதி சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

ஆபிரிக்க - எத்தியோப்பியாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள வொல்லேகா பகுதியில் ஏராளமான பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பஸ் திடீரென நிலைதடுமாறி குடைசாய்தமையால் விபத்துக்குள்ளானது.

 குறித்த விபத்து தொடர்பாக தகவல் அறிந்த பொலிஸார்  மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். 

குறித்த விபத்தில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.