கொழும்பு - அவிசாவளை - பழைய வீதி -ஹேவாகம பிரதேசத்தில் அரச மரமொன்று வீதியில் முறிந்து வீழ்ந்ததில் இன்று போக்குவரத்துக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று காலை அரச மரம் வீதியில் முறிந்து வீழ்ந்தமையால் கொழும்பு மற்றும் அவிசாவளை நோக்கிய இரு வீதிகளிலும் போக்குவரத்து தடைப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த சம்பவத்தில் நபர் ஒருவர்  காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் அரச மரம் வீதியில் இருந்து அகற்றப்பட்டு போக்குவரத்து வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.