பிரித்தானிய இளவரசர் பிலிப் செலுத்திச்சென்ற கார் விபத்தில் சிக்கியதில் இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக எவ்வித காயங்களுமின்றி உயர் தப்பியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரித்தானிய ராணி இரண்டாவது எலிசபெத்தின் கணவரும், இளவரசருமான பிலிப் (வயது 97) செலுத்திச்சென்ற கார் விபத்தில் சிக்கியது. 

இந்த விபத்தில் அதிர்ஷடவசமாக காயமின்றி இளவரசர் பிலிப் தப்பினார். கிழக்கு இங்கிலாந்தில் உள்ள சண்டிங்கம் எஸ்டேட் அருகே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

இளவரசர் பிலிப் தனது காரை பிரதான வீதிக்கு எடுத்துச்செல்லும் போது, அவ்வழியாக வந்த மற்றொரு கார் மோதியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

விபத்து ஏற்பட்ட மற்றொரு காரில் இருந்த இருவருக்கு சிறு காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.

விபத்து நடைபெற்றதை பக்கிங்ஹாம் அரண்மனையும் உறுதி செய்துள்ள நிலையில, இளவரசருக்கு இந்த விபத்தில் எவ்வித காயங்களும் ஏற்படவில்லையென எனவும் பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.