கொலம்பிய தலைநகர் பொகோடாவில் இடம்பெற்ற பாரிய கார் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் குறைந்தது 9 பேர் உயிரிழந்தனர்.

நேற்று மாலை இடம்பெற்ற இந்த குண்டு வெடிப்பில் 54 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.

ஜெனரல் சன்டென்டர் பொலிஸ் கல்லூரியை இலக்கு வைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட கார் ஒன்று கல்லூரியின் சுவரில் மோதி வெடிக்க வைக்கப்பட்ட நிலையில் அங்கு பயிற்சிகளில் ஈடுபட்டிருந்த பொலிஸ் பயிலுனர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.