வெலிகம பிரதேசத்தில் நூல் நிலையமொன்றில் நேற்றிரவு தீ பரவியுள்ளது.

வெலிகம பொரால வீதியில் அமைந்துள்ள குறித்த நூல் நிலையத்தின் மேல் மாடியில் குறித்த தீ பரவியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

குறித்த தீயினை பிரதேசவாசிகள் மற்றும் தீயணைப்பு பிரிவினர் இணைந்து அணைத்துள்ள நிலையில் , தீப்பரவலுக்கான காரணம் கண்டறியப்படவில்லை.

இந்நிலையில் கிளிநொச்சி பொதுச்சந்தைப் பகுதியில் தீடீரென ஏற்பட்டதீ விபத்தினால் அங்குள்ள பழக்கடை ஒன்று முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளது.

குறித்த  தீ ஏனைய வர்த்தக நிலையங்களுக்கு பரவாது கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் கரைச்சிப்பிரதேச சபையின் தீயணைப்புப்பிரிவினரும் மக்களும் ஈடுபட்டனர்.

குறித்த சம்வம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.