பல்கலைக்கழகத்தினுள் மாணவர்களை உள்வாங்கும் எண்ணிக்கையை 6618 ஆல் அதிகரித்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். 

உயர்கல்வி அமைச்சினை நான் பொறுப்பேற்கும் போது 24540 என்ற எண்ணிக்கையான மாணவர்களே பல்கலைக்கழக அனுமதியை பெற்றனர். 

இப்போது அதனை  31158 ஆக அதிகரிக்க செய்துள்ளோம். உயர் கல்வித்துறையில் இந்த நான்கு வருட காலத்திற்குள் பொன்னான ஒரு யுகத்தை உருவாக்கி அதன் வளர்ச்சிக்காக மட்டும் 60 பில்லியன் அதாவது 60,000 மில்லியனை இந்த அரசு செலவிட்டுள்ளது. 

சப்ரகமுவ பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் திறப்புவிழா  நேற்று வியாழக்கிழமை (17) பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவின் தலைமையில் குருவிட்ட ஏதன்டவல பிரதேசத்தில் இடம்பெற்றது. 

இதில் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய போதே அமைச்சர் ஹக்கீம் மேற்கண்டவாறு கூறினார்.