முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொலை தொடர்பில் முன்னாள் விடுதலைப் புலிகளின் உறுப்பினரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் படுகொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 39 வயதுடைய விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் ஒருவரே ஜேர்மனியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.

கடந்த 2005 ஆம் ஆண்டு முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.