(இரோஷா வேலு)

ஜனாதிபதியின் செயற்பாடுகள் குறுகிய நோக்கம் கொண்டவையாக காணப்படுகின்றது என குற்றஞ்சாட்டும் நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கம் 2015 ஆம் ஆண்டுக்கு பிறகு மாத்திரமல்ல அதற்கு முன்னரும் அரசாங்க நிறுவனங்களில் ஊழல்கள் இடம்பெற்றன. அவை குறித்தும் விசாரணைகள் அவசியம் எனவும் சுட்டிக்காட்டியது. 

கொழும்பில் அமைந்துள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் இன்று நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு அவ்வியக்கம் தெரிவித்தது. 

இது தொடர்பில் அவர்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில், 

2015 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டுக்கிடைப்பட்ட காலத்தில் அரசாங்க நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள, ஜனாதிபதியால் புதிய ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. 

இதுவரை அவரால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களினால் நாட்டில் ஏதேனும் மாற்றங்கள் உருவாகியுள்ளதா என்பதும் சந்தேகமே.  2015 முன்னரும் சுமார் 12 வருட காலப்பகுதியில் அரசாங்க நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் குறித்து அவர் விசாரணைகளை மேற்கொள்ளுதல் வேண்டும்.