(நா.தினுஷா) 

அரசியல் அமைப்பு உருவாக்குவதற்கு தமிழ் பிரதிநிதிகளின் ஒத்துழைப்பு கிடைக்பெற்றுள்ள நிலையில் அதனை சாதகமாக பயன்படுத்திகொண்டு பாராளுமன்ற உறப்பினர்கள் 225 பேரும் அரசியல் அமைப்பு உருவாக்க செயன்முறைக்கு முழு ஒத்துழைப்பினை வழங்க வேண்டுமென நீதியான சமூகத்திற்கான தேசிய இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.   

ஆட்சிப் பலத்துக்காக போலியான காரணங்களைக் காட்டமல் புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். 

பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி மாகாண சபைகளுக்கான தேர்தலும் காலங்கடத்தப்பட்டே வருகின்றது. 

பாராளுமன்ற உறுப்பினர்களில் பலர் விகிதாசார முறைமையில் தேர்தலை நடத்துவதற்கும் இணக்கத்தினை தெரிவித்துள்ள நிலையில் விகிதாசார முறையில் நடத்துவதற்கு அனைவரதும் ஒத்துழைப்பினை பெற்றுக்கொண்டு எஞ்சியுள்ள 3 மாகாண சபைகளுக்களையும் கலைத்து  ஒரே தினத்தில் 9 மாகாண சபைகளுக்குமான தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கவேணடும் என்றும் அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் பாலித விலிசினிய குமார தெரிவித்தார். 

ராஜகிரியவில் அமைந்துள்ள நீதியான சமூகத்திற்கான தேசிய இயத்தின் தலைமை காரியாலயத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.