(எம்.ஆர்.எம்.வஸீம்)

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எமது கூட்டணி தலைவர்கள் தீர்மானிப்பார்கள். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மத்திய குழுவில் பரிந்துரை செய்யப்பட்டுள்ள போதும் ஜனாதிபதி இதுவரை அதுதொடர்பில் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சுதந்திர ஊடக கேந்திர நிலையத்தில் இன்று இடம்பெற்ற செய்திளார் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே   எஸ்.பி. திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

எந்த தேர்தல் நடந்தாலும் அதில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன பெரமுன இணைந்த பாரிய கூட்டணி அமைத்துக்கொண்டே தேர்தலுக்கு முகம்கொடுக்க இருக்கின்றோம். 

அதனால் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது எமக்குப் பிரச்சினையில்லை. அதனை எமது கூட்டணியின் தலைவர்கள் உரிய நேரத்தில் பொருத்தமான ஒருவரை தெரிவுசெய்து மக்களுக்கு அறிவிப்பார்கள் என்றார்.