இருபதுக்கு 20 ஓவர் கிரிக்கெட் அணித் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக சையிட் அப்ரிடி அறிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணி இருபதுக்கு - 20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேற முடியாமல் குரூப் சுற்றிலேயே வெளியேறியது.

இதைத்தொடர்ந்து பாகிஸ்தான்  இருபதுக்கு - 20 அணியின் தலைவர் பொறுப்பில் இருந்து தான் விலகுவதாக அப்ரிடி தெரிவித்துள்ளார்.

இதை தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் அப்ரிடி இதை அறிவித்தார். 

அதில்  பாகிஸ்தான் கிரிக்கட் சபை தலைவர், கிரிக்கட் வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள அவர், தலைவர் பதவியில் இருந்து விலகினாலும் இருபதுக்கு - 20 போட்டிகளில் தான் தொடர்ந்து விளையாடப் போவதாக தெரிவித்துள்ளார்.