(எம்.மனோசித்ரா)

பதவி மீதான பேராசையினால் ராஜபக்ஷ சகோதரர்களுக்கு இடையிலேயே முரண்பாடுகள் ஏற்படும் நிலை காணப்படுவதாக  பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார். 

 வெற்றி பெறக்கூடிய தகுதியான ஒருவரையே ஐக்கிய தேசிய கட்சி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக களமிறக்கும். 

எனினும் கட்சி ரீதியாக அந்த விடயம் தொடர்பில் இதுவரையில் உத்தியோகபூர்வமான கலந்துரையாடல்கள் எவையும் இடம்பெறவில்லை.

பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.