கிளிநொச்சி, இரணைமடுக் குளத்தின் 99 ஆவது ஆண்டு  நிறைவை முன்னிட்டு 99 பானைகளில் பொங்கல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இன்று வியாழக்கிழமை ( 17-01-2019 ) குறித்த நிகழ்வு  சிறப்பாக இடம்பெற்றது. 

இரணைமடுக் குளம் நீர்பாசனத்திற்காக திறந்து விடப்பட்டு 99 ஆண்டினை கொண்டாடும் வகையில் கிளிநாச்சி இரணைமடு விவசாய சம்மேளனத்தின் ஏற்பாட்டில் குறித்த பொங்கல் நிகழ்வு  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாட்டினை தொடர்ந்து குறித்த பொங்கல் நிகழ்வு இடம்பெற்றது. 

பொங்கல் நிகழ்வின் பிரதான பொங்கல் பானையினை வடமாகாண சபை முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், முன்னாள் வடமாாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை ஆகியோர் வைத்தனர். 

அதனைத் தொடர்ந்து இரணைமடு விவசாயிகளினால் ஏனைய பொங்கல் பானைகள் வைக்கப்படு பொங்கல் நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.