அவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் விளையாடிவரும் இலங்கை அணியின் இரு வீரர்கள் சற்று முன்னர் காயமடைந்துள்ளனர்

களத்தடுப்பில் ஈடுபட்டுள்ள இலங்கை அணியின் குசல் மென்டிஸ் ரொசேன் சில்வா ஆகியோரே காயங்களிற்கு உள்ளாகியுள்ளனர்.

பயிற்சிப்போட்டியின் போது டில்ருவான் பெரேரா வீசிய பந்தை ஜேக் டொரன் என்ற வீரர் அடித்த வேளை பந்து  குசால் மென்டிசி;ன் முகத்தை நோக்கி சென்றுள்ளது, அவர் அதனை தவிர்ப்பதற்காக ஹெல்மெட்டின் முன்னால் கையை நீட்டியுள்ளார் அவ்வேளை பந்து அவரது கையை தாக்கியுள்ளது.

மென்டிஸ் உடனடியாக வலியால் அவதிப்பட ஏனைய வீரர்கள் அவரை நோக்கி ஒடியுள்ளனர், அவரது வலதுகையில் உள்ள விரல்  மோசமான காயத்திற்குள்ளாகியுள்ளதை  தொலைக்காட்சிகள் காண்பித்துள்ளன

இதன் பின்னர் சோர்ட்லெக்கில் களத்தடுப்பில் ஈடுபட வந்த ரொசேன் சில்வாவும் பந்தை பிடிக்க முயன்றவேளை காயத்திற்குள்ளாகியுள்ளார்.

இதன் பின்னர் சந்திமல் சோர்ட்லெக்கிலிருந்து வீரர்களை அகற்றியுள்ளார்