(ஆர்.விதுஷா)

மெதமுலனை  டீ.ஏ.ராஜபக்ஷ  அருங்காட்சியகம்  நிர்மாணிப்பதற்கு  3 கோடி 39 இலட்சம் ரூபா  அரச நிதியை  முறையற்ற விதத்தில்  பயன்படுத்தியமை  தொடர்பில்  முன்னாள் பாதுகாப்புச்   செயலாளர்  கோத்தாபய ராஜபக்ஷ  உள்ளிட்ட  7  பேருக்கு  எதிராக  சட்டமாதிபர்  திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள  வழக்கு விசாரணைகள் எதிர்வரும்  22 ஆம் திகதி முதல் தொடர் விசாரணைக்கு  எடுத்துக்கொள்ள    தீர்மானிக்கப்பட்டுள்ளது.  

குறித்த வழக்கு  தொடர்பான விசாரணைகள் பிரதான நியாய  மேல் நீதிமன்றத்தில் இன்றைய தினம்  சம்பா அபயக்கோன் , சம்பத்  விஜேரத்ன மற்றும்  சம்பா  ஜானகி ராஜரத்ன ஆகிய  நீதிபதிகள்  முன்னிலையில்  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே   இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.