(ஆர்.விதுஷா)

பதுளை,  லுனுகல  பகுதியில் 10 பேருடன் பயணித்த  வேன் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்,  9 பேர்  படுகாயமடைந்துள்ளனர். 

குறித்த விபத்து சம்பவம் இன்று வியாழக்கிழமை அதிகாலை  3.45 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

பசறை- லுனுகல  பிரதான வீதியின்  கொடல்பத்த  பகுதியில்  வைத்து குறித்த வேன் கட்டுப்பாட்டை இழந்து சுமார் நூறு அடிபள்ளத்தில் வீழ்ந்து  விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

களுத்துறை - கட்டுக்குருந்த  விசேட அதிரடிபப்டை  பயிற்சி முகாமில் இடம்பெற்ற நிகழ்விவொன்றில் கலந்து கொண்ட பின்னர் மீண்டும் அங்கிருந்து   திரும்பிய நிலையில் சாரதிக்கு தூக்ககலக்கம் ஏற்பட்ட நிலையில் வேன் கட்டுப்பாட்டை  இழந்து  100 அடி  பள்ளத்தில் வீழ்ந்துள்ளது. 

விபத்துக்குள்ளான வேனில் பயணித்த 6 ஆண்கள் மற்றும்  3 பெண்கள்  உள்ளிட்ட  10 பேர்   படுகாயமடைந்த நிலையில்  லுணுகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டுள்ள நிலையில் அவர்களில்  ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்தவர்   48 வயதுடைய  லுனுகல பகுதியை சேர்ந்த  அபேசிங்க முதியான்சலாகே  சமரக்கோன் பண்டா  எனப்படுபவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.  

உயிரிழந்தவரின் சடலம்  லுனுகல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான  நடவடிக்கைகளும் இன்றைய தினம் முன்னெடுக்கபட்டுள்ளது.