(இராஜதுரை  ஹஷான்)

 புதிய  அரசியலமைப்பு  வரைபானது  முற்றுமுழுதாக  பெரும்பான்மை   மக்களுக்கு   எதிரானதாகவே  காணப் படுகின் றது என  என பாராளுமன்ற   உறுப்பினர்  வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

இதன்  தாக்கம்  எதிர்காலத்தில்     சிறுபான்மை   மக்களுக்கு  பாதிப்பினை  ஏற்படுத்தும்.  இதன்  காரணமாகவே   புதிய    அரசியலமைப்பு  உருவாக்கத்தை கூட்டு எதிரணியாக  அனைவரும்  ஒன்றினைந்து   எதிர்க்கின்றோம் என்றும் குறிப் பிட்டார்.

 புதிய   அரசியலமைப்பு  உருவாக்கத்தை பொதுஜன  பெரமுன முன்னணியினர் எதிர்க்கின்றமை,  அதில் இடம் பெறு கின்ற   வாதப்பிரதிவாதங்கள்   தொடர்பில்  வினவிய போதே   அவர்  மேற்கண்டவாறு   குறிப்பிட்டார்.

 மஹிந்த  ராஜபக்ஷ  தரப்பினர்  தமிழ்  மக்களுக்கு எதிரானவர்கள்.  அதன்  காரணமாகவே  புதிய  அரசியலமைப்பை   எதிர்க்கின்றார்கள்   என்று   எம்மீது   குற்றஞ்சாட்டப்படுகின்றது. 

  

புதிய  அரசியலமைப்பில்  பெரும்பான்மை  மக்களுக்கு  அதாவது  சிங்கள மக்களுக்கு  எதிரான பல விடயங்கள் உள் ளடக்கப்பட்டுள்ளது.  

இவர்கள்  குறிப்பிடுவதை போன்று  அரசியலமைப்பு  உருவாக்கப்பட்டால்  எதிர்காலத்தில்  இரண்டு  இன  மக்கள் மத்தியி லும்  பல  செயற்பாடுகளின்  போது  பாரிய பிரச்சினைகள்  ஏற்படும். 

மீண்டும்    சிவில் யுத்தம்  ஒன்று  ஏற்படுவதற்கான   சூழல்  இதன் காரணமாக  ஏற்படும் நிலையும்  தோற்றம்  பெறலாம்.  அவ்வேளையில்   அரசியலமைப்பினை  உருவாக்கியவர்கள்  எவரும் இருக்கமாட்டார்கள்.  இதன்  காரணமாகவே   கூட்டு  எதிரணி  புதிய  அரசியலமைப்பினை  கடுமையாக  எதிர்க்கின்றது.