தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரும் அக்கரைப்பற்று மாநகரசபையின் பிரதி மேயருமான அப்துல் கபூர் அஸ்மி பயங்கரவாத தடுப்பு  குற்றப்புலனாய்வுப் பிரிவினால் இன்று (17) அக்கரைப்பற்று பிரதேசத்தில் வைத்து கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.


அக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயரான 33 வயதுடைய அப்துல் கபூர் அஷ்மின் என்பவரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கடந்த 4 வருடத்திற்கு முன் இடம்பெற்ற பண மோசடி தொடர்பான விசாரணைக்கு பயங்கரவாத தடுப்பு  குற்றப் புலனாய்வுப் பிரிவினால் விசாரணைக்காக கொழும்பிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

குறித்த விசாரணைக்கு செல்லாது  இருந்து வந்த நிலையில் அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டு அவரை  கொழும்பில் இருந்து அக்கரைப்பற்றுக்கு சென்ற பயங்கரவாத தடுப்பு  குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கைதுசெய்யப்பட்டு கொழும்பிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். 

விசாரணைக்கு அழைக்கப்பட்டு செல்லாததற்கான முதல் விசாரணையின் பின்னர் ஏனைய விசாரணைகள் இடம்பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.