(எம்.மனோசித்ரா)

இலங்கையுடன் எதிர்காலத்தில்  விரிவான தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள தமது நாடு எதிர்பார்ப்பதாக பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டியுடேர்ட்  தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிலிப்பைன்ஸிற்கான அரச முறை விஜயம் இரு நாடுகளுக்குமிடையிலான தொடர்புகளில் வரலாற்று முக்கியத்துவமுடைய சந்தர்ப்பமாகும் எனக் குறிப்பிட்ட பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டியுடேர்ட், அந்த நம்பிக்கையான நட்புறவுடன் இரு நாடுகளுக்குமிடையிலான தொடர்புகளை பலப்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளார். 

பிலிப்பைன்ஸிற்கான நான்கு நாள் அரச முறை விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டியுடேர்ட்வுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று புதன்கிழமை இடம்பெற்றிருந்தது. 

அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டியுடேர்ட் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.