இலங்கையில் பிரித்தானிய உயர் கல்வியை வழங்குவதில் ஒரு முன்னணி கல்வி நிறுவனமாகத் திகழ்ந்து வருவதுடன் நாட்டில் ஒரு முன்னோடி தகவல் தொழில்நுட்ப மற்றும் வணிக துறை பல்கலைக்கழகமாகத் திகழ்ந்து வருகின்ற.

Informatics Institute of Technology (IIT) மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் University of Westminster பல்கலைக்கழகம் ஆகியன இணைந்து இலங்கையில் கிடைக்கின்ற மிகவும் தலைசிறந்த வணிக முகாமைத்துவத் துறை BA (Hons) பட்டப்படிப்பை மேற்கொண்டு வணிக உலகில் வெற்றி காண்பதற்கு IIT மாணவர்களுக்கு தற்போது வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளன.

4 ஆண்டு கால வணிக முகாமைத்துவ கற்கைநெறியானது மிக வேகமாக வளர்ச்சி மாற்றம் கண்டு வருகின்ற பூகோள வர்த்தக உலகிற்கு மிகவும் பொருத்தமான வணிக அறிவுரூபவ் திறன்கள் மற்றும் ஆற்றல்களை மேம்படுத்துவதற்கு வலுவான முக்கியத்துவம் அளிக்கும் ஒரு கல்வி அனுபவத்தை வழங்குகின்றது. 

சிந்தனைகள் மற்றும் சிக்கல்களை பிரதிபலிக்கும் அணுகுமுறையுடன் வினவல் மற்றும் திறனாய்வு ஆகியவற்றை வளர்க்க இப்பாடநெறி உதவுகின்றது. அதன் மூலமாக வெற்றி காணும் பட்டதாரிகள் தனியார் அல்லது அரச துறையில் நிறுவனங்களுக்கு தீவிரமான பங்களிப்பை வழங்குவதற்கு, மற்றும் தமது சொந்த வர்த்தக முயற்சிகளில் திறம்பட செயற்படுவதற்கு தலைப்படுகின்றனர்.

கற்கைநெறியின் முதலாவது ஆண்டில் பூகோள வணிக சூழல் எவ்வாறு தொழிற்படுகின்றது மற்றும் வணிக நிறுவனங்களின் தொழிற்பாடுகள் தொடர்பில் மாணவர்களுக்கு அறிமுகம் வழங்கப்படுகின்றது. தற்காலத்தில் நிறுவனங்களில் பெரும்பாலும் உபயோகிக்கப்படுகின்ற அதிநவீன தொழில்நுட்ப கருவிகளை உபயோகித்து, தகவல் விபரங்களைப் பகுப்பாய்வு செய்து, நிர்வகிக்கும் நேரடி அனுபவத்தையும் அவர்கள் பெற்றுக்கொள்கின்றனர்.

கணக்கியல் மற்றும் நிதி அடிப்படை அம்சங்கள், சந்தைப்படுத்தல் கோட்பாடுகள், மக்கள் மற்றும் நிறுவனங்கள் போன்ற பாட அலகுகளின் மூலமான அறிவும் அவர்களுக்கு புகட்டப்படுகின்றது.

இதை விட, வணிக கணிதவியல், கல்வியல் ஆங்கிலம் போன்ற விருப்பத்திற்குரிய பாட அலகுகள், திறன்மிக்க விளக்க படைப்பாக்கங்களை முன்வைத்தல், ஆய்வு மற்றும் குறிப்பு, அறிக்கை ஆக்கம், விமர்சன சிந்தனை மற்றும் மதிப்பீடுகள் போன்ற துறைகள் மீதும் கவனம் செலுத்தப்படுகின்றது.

கற்கைநெறியில் இரண்டாவது ஆண்டில், தொழிற்பாடுகள்ரூபவ் டிஜிட்டல் வணிகம் மற்றும் வணிக தீர்மானங்களை வகுத்தல் ஆகிய பாட அலகுகள் மாணவர்களுக்கு புகட்டப்படுவதுடன், வணிக உலகில் வெற்றியீட்டுவதற்கு தொழில்நுட்பத்தின் அனுகூலத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது தொடர்பிலும் அவர்களுக்கு போதிக்கப்படுகின்றது.

உண்மையான வணிக உலகினை உருவகப்படுத்துகின்ற சந்தர்ப்பங்களை விளக்க உபயோகிக்கப்படுகின்ற விநியோகச் சங்கிலி மற்றும் விநியோகச் சங்கிலி முகாமைத்துவம், நிறுவன வளத் திட்டமிடல் ஆகியவற்றை உள்ளடக்கிய வணிக தீர்மானத்தை மேற்கொள்ளும் மென்பொருள் மற்றும் வாடிக்கையாளர் உறவுமுறை முகாமைத்துவ மென்பொருள் போன்ற பல்வேறுபட்ட விநியோகச் சங்கிலி மற்றும் வணிக தீர்மானத்தை மேற்கொள்ளும் மென்பொருள் தொடர்பிலும் அவர்களுக்கு போதிக்கப்படுகின்றது.

மக்களை நிர்வகித்தல் மற்றும் அவர்களுக்கு தலைமை தாங்குதல் தொடர்பில் வடிவமைக்கப்பட்டுள்ள பாட அலகின் மூலமாக மாணவர்களுடைய தலைமைத்துவம் மற்றும் மக்களை கையாளும் திறன்கள் விருத்தி செய்யப்படுகின்றன.

தொழில்சார் நடைமுறை பாட அலகின் கீழ் 3 வாரங்களுக்கு முன்னணி நிறுவனம் ஒன்றில் பயிற்சியைப் பெறும் வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்படுவதுடன், தொடர்பாடல், நெறிமுறைகள் மற்றும் ஆட்சி முறை போன்ற அம்சங்களை அவர்கள் விளங்கிக் கொள்வதற்கு இது வழிகோலுகின்றது. விருப்பத்திற்குரிய பாட அலகுகளாக, வணிக நெறிமுறைகள், வர்த்தக சமூகப் பொறுப்புணர்வுரூபவ் செயற்திட்ட முகாமைத்துவம்ரூபவ் இணைய இடமளிக்கும் வணிகம் மற்றும் தொழில்முயற்சி நடைமுறை ஆகியவற்றையும் அவர்கள் தெரிவு செய்ய முடியும்.

கற்கைநெறியின் மூன்றாவது ஆண்டில் முன்னணி நிறுவனம் ஒன்றில் 12 மாத கால உள்ளகப் பயிற்சியைப் பெறும் வாய்ப்பு மாணவர்களுக்கு வழங்கப்படுவதுடன், முதல் இரண்டு ஆண்டுகளில் தாம் கற்றுக்கொண்ட அறிவை நடைமுறைரீதியாக முன்னெடுத்து, நிறுவனத்தில் அவர்கள் முகங்கொடுக்கும் சூழ்நிலைகளின் மூலமாக உண்மையான நிலைமைகள் தொடர்புபட்ட புதிய அறிவை அவர்கள் பெற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கப்படுகின்றது.

வேறுபட்ட திணைக்களங்களில் தொழிற்பாட்டு அம்சங்கள் தொடர்பான அனுபவத்தை அவர்கள் பெற்றுக்கொள்வதுடன், தொழில்சார் திறன்களை விருத்தி செய்து, அதன் மூலமாக அவர்கள் எதிர்காலத்தில் தமது தொழிலில் காலடியெடுத்து வைக்கும் போது தன்னம்பிக்கையுடன் திகழ்வதற்கு முடிகின்றது. 

பூகோள மூலோபாய முகாமைத்துவம் மற்றும் நிலைபேற்றியல் கொண்ட வணிகம், புத்தாக்கம் மற்றும் படைப்பாக்கத்திறன் போன்ற தற்போதைய பிரபல தலைப்புக்களில் அறிவை இறுதி கற்கையாண்டில் அவர்கள் பெற்றுக்கொள்கின்றனர்.

டிஜிட்டல் பகுப்பாய்வு, வணிகத்திற்கான சமூக ஊடகம், பூகோள கணக்கியல் மற்றும் பல்தேசிய நிறுவனங்கள், ஊடாடல் மற்றும் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் மற்றும் தொழில்சார் அனுபவம் உள்ளிட்ட பல்வேறு விருப்பத்திற்குரிய பாட அலகுகளை தெரிவு செய்யும் வாய்ப்பும் உண்டு.

வணிக முகாமைத்துவ BA (Hons) பட்டப்படிப்பு கற்கைநெறியில் இணைந்து கொள்வதற்கு மாணவர்கள் கபொத (உ/த) பரீட்சையில் எந்தவொரு துறையிலும் குறைந்தபட்சமாக 12 புள்ளிகளைப் பெற்றிருத்தல் வேண்டும். ஒவ்வொரு A சித்திக்கும் தலா 10 புள்ளிகளும், ஒவ்வொரு B சித்திக்கும் தலா 8 புள்ளிகளும், ஒவ்வொரு C சித்திக்கும் தலா 6 புள்ளிகளும், ஒவ்வொரு S சித்திக்கும் தலா 4 புள்ளிகளும், பொது தகவல் தொழில்நுட்பம் (உள்நாட்டு உ/த) மற்றும் ஒவ்வொரு நு சித்திக்கும் (லண்டன் உ/த) தலா 2 புள்ளிகளும் வழங்கப்படுகின்றன.

கபொத (சா/த) வரை மட்டும் தமது கல்வியைப் பூர்த்தி செய்து, உள்நாட்டு கபொத (சா/த) பரீட்சையில் ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் திறமைச் சித்திகளுடன் (Credit pass) குறைந்தபட்சம் 6 பாடங்களில் சித்தியைப் பெற்றுள்ள அல்லது லண்டன் கபொத (சா/த) பரீட்சையில் ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் திறமைச் சித்திகளுடன் குறைந்தபட்சம் 5 பாடங்களில் சித்திகளைப் பெற்றுள்ள மாணவர்கள் IIT வழங்கும் “Foundation Certificate in Higher Education” பாடநெறியைப் பின்பற்றும் வாய்ப்பினைக் கொண்டுள்ளதுடன் அதனை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்யும் பட்சத்தில் மேற்குறிப்பிட்ட பட்டப்படிப்பு கற்கைநெறிக்குள் தம்மையும் இணைத்துக்கொள்ள முடியும்.

1990 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட IIT ஆனது தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் மற்றும் வியாபாரம் ஆகிய துறைகளில் நன்மதிப்புடைய பிரித்தானிய பட்டப்படிப்புக்களை வழங்க ஆரம்பித்த முதலாவது தனியார் உயர் கல்வி நிலையம் என்ற பெருமையைக் கொண்டுள்ளது. ஐக்கிய இராச்சியத்திலுள்ள University of Westminster மற்றும் Robert Gordon University ஆகியவற்றின் பட்டப்படிப்பு கற்கைநெறிகளை வழங்கி வருகின்றது.

உலகத்தரம் வாய்ந்த பட்டதாரிகளை தோற்றுவித்துள்ளதன் மூலமாக கடந்த காலங்களில் இலங்கையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகத் துறைகளுக்கு வலுவூட்டுவதில் IIT  முக்கியமான பங்கு வகித்துள்ளது. இந்த பட்டதாரிகள் உள்நாட்டு மற்றும் சர்வதேச வர்த்தக மற்றும் அரச ஸ்தாபனங்களுக்கு பங்களிப்பினை வழங்கி வெற்றிகரமான தொழில் முயற்சியாளர்களாகவும்ரூபவ் மற்றும் தகவல் தொழில்நுட்பஃவர்த்தகத் தொழிற்துறை சார்ந்தவர்களாகவும் மாறியுள்ளனர்.

ஆரம்பிக்கப்பட்ட காலம் முதற்கொண்டு பல்லாயிரக்கணக்கான பட்டதாரிகளை IIT உருவாக்கியுள்ளதுடன், உலகெங்கிலும் பல நூற்றுக்கணக்கான ஸ்தாபனங்களில் அவர்கள் சிறப்பாக சேவையாற்றி வருகின்றனர்.