உலக வங்கி தலைவர் பதவிக்கு பரிந்துரைத்த டிரம்ப் மகள் !

Published By: Daya

17 Jan, 2019 | 12:20 PM
image

உலக வங்கியின் தலைவர் பதவியில் உள்ள ஜிம் யாங் கிம், அடுத்த மாதம் பதவி விலகப்போவதாக தெரிவித்துள்ள நிலையில்  அவர் தனியார் உட்கட்டமைப்பு முதலீடு நிறுவனம் ஒன்றில் சேரப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

 இந்நிலையில் உலக வங்கியின் தலைவர் பதவிக்கு அடுத்து வரப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

குறித்த பதவிக்கு தமிழ்நாட்டில் சென்னையில் தமிழ் பேசும் குடும்பத்தில் பிறந்த பெண்ணான இந்திரா நூயி (வயது 63) பெயர் அடிபடுகிறது. இவர், குளிர்பான நிறுவனமான ‘பெப்சி’யின் தலைமை செயல் அதிகாரியாக 12 ஆண்டுகள் பணியாற்றிய நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் பதவி விலகினார்.

இவரது பெயரை உலக வங்கி தலைவர் பதவிக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் மகள் இவான்கா டிரம்ப் பரிந்துரை செய்துள்ளார். இது குறித்த தகவல்களை ‘நியூயோர்க் டைம்ஸ்’ பத்திரிகை வெளியிட்டுள்ளது.

டுவிட்டரில் இவான்கா டிரம்ப் வெளியிட்ட ஒரு பதிவில், இந்திரா நூயியை ‘வழிகாட்டி, உத்வேகம் தருபவர்’ என குறிப்பிட்டுள்ளார்.

உலக வங்கியின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் பணி இவான்கா டிரம்ப், அமெரிக்க நிதி மந்திரி ஸ்டீபன் மனுசின், வாஷிங்டன் வெள்ளை மாளிகை பணியாளர்களின் தற்காலிக தலைவர் மிக் முல்வானி ஆகியோர் மேற்பார்வையில் நடந்து வருவதாக ‘நியூயேரர்க் டைம்ஸ்’ பத்திரிகை தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52