தனித்துவமான வடிவம் மற்றும் உயர் வாழ்க்கைத் தரத்திற்கு உறுதி அளிக்கும் மாடிக் குடியிருப்புகள் மற்றும் வீடுகளை நிர்மாணிப்பதன் மூலம் இலங்கையர்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கு ஸ்ரீலங்கா டெலிகொம் (SLT) அண்மையில் Evercore Properties நிறுவனத்துடன் கூட்டிணைந்துள்ளது. 

மாடிக்குடியிருப்பு தகவல் தொடர்பாடலின் முதுகெலும்பாக செயற்படும் நிறுவனத்தின் ஃபைபர் உட்கட்டமைப்பு மூலம், 35 ஆடம்பர மாடிக் குடியிருப்பு கட்டிடங்களுக்கான முழுமையான டிஜிட்டல் சேவைகளை இந்த உடன்படிக்கையின் கீழ் SLT வழங்கவுள்ளது.

இந்த இரு நிறுவனங்களுக்கும் இடையிலான உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு அண்மையில் SLT வளாகத்தில் நடைபெற்றது. இதில் Evercore Properties நிறுவனத்தின் சார்பில், ராஜன் சங்கரன் (பணிப்பாளர்) மற்றும் ஜஸ்பிர் சிங் (பணிப்பாளர்) கைச்சாத்திட்டதோடு, SLT தரப்பில், கே.ஏ.கே. பெரேரா (தலைமை நிறைவேற்று அதிகாரி) மற்றும் இமன்த விஜேகோன் (தலைமை விற்பனை மற்றும் பிராந்திய அதிகாரி) ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

இந்தத் திட்டத்தில் பங்கேற்றிருக்கும் இரு அமைப்புகளில் இருந்தும் மேலும் பல அதிகாரிகளும் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

PEO TV மூலம் நுண்தெளிவு (HD) தொலைக்காட்சி, தெட்டத்தெளிவான குரல் தொடர்பாடல்கள் அதேபோன்று வினாடிக்கு 100 MB வரை பதிவிறக்க வேகத்துடன் அதிவே இணையதள இணைப்பை வழங்கும் நிறுவனத்தின் வீட்டுக்கு ஃபைபர் உட்கட்டமைப்புடன் SLT மாடிக்குடியிருப்பின் ஒட்டுமொத்த அலகிற்கும் வலுவூட்டும். SLT இன் வலுவான மற்றும் நம்பகமாக ICT சேவைகள் கட்டிட குடியிருப்பாளர்களின் புரட்சிகரமான டிஜிட்டல் வாழ்க்கைமுறை அனுபவத்திற்கு வழி ஏற்படுத்துகிறது.

கல்கிசை கடற்கரையில் இருந்து ஒரு சில நிமிடங்களுக்கு அப்பால் மற்றும் காலி வீதியில் இருந்து வெறும் 150 மீற்றர்களில் மையமாகக் கொண்டிருக்கும் கல்கிசை, குவாரி வீதியில் The Mount புதிய மாடிக்குடியிருப்பு வளாகம் அமைந்துள்ளது. போட்டி விலைகளில் நவீன வசதிகளுடன் வசதியாக வாழ்க்கை முறையை அனுபவிக்க மற்றும் தமது கனவு இல்லத்திற்கான வாய்ப்பை இது ஏற்படுத்தியுள்ளது.