வாகனமொன்றில் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் சென்ற சந்தேக நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர் கொழும்பு-கடுவலை பகுதியில் வைத்து பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் இராஜகிரிய, ஒபேசேகரபுர பகுதியை சேர்ந்த 53 வயதானவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேக நபரிடம் இருந்து சுமார் 6 கோடி ரூபா பெறுமதியான  ஐந்து கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவரை இன்று கடுவலை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கடுவலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.