(நா.தினுஷா)

அரசாங்கத்துக்கு எதிராக மாத்திரமே ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்க முடியும் மாறாக அமைச்சுக்களுக்கு எதிராக ஆணைக்குழு நியமிக்க முடியாது. 

இதனை புரிந்துக்கொள்ளாமல் பொய்யான தகவல்களை கசியவிட்டு அரசியல் செய்ய அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் முயற்சிப்பதாகவும் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். 

சுகாதார அமைச்சு முறையற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கடந்த மூன்றவருடங்களில் சுகாதார அமைச்சினூடாக முன்னெடுக்கப்பட்ட ஊழல்கள் தொடர்பில் விசாரிப்பதற்கென விசேட ஜனாதிபதி ஆணைக்குவொன்றினை நியமிக்குமாறு கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் கடந்த 12 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்திருந்தனர். 

இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் வகையிலான ஊடகவியலாளர் சந்திப்பொன்று புதன் கிழமை அலரிமாளிகையில் இடம்பெற்றது. அதன்போதே அமைசச்சர் ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.