ஹெரோயின் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய மேலும் இரு முக்கிய சந்தேக நபர்களை பொலிஸார் நீர்கொழும்பில் வைத்து கைதுசெய்துள்ளனர்.

தென்பகுதி கடற்பரப்பில் கப்பலொன்றில் வைத்து 110 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கடந்த வாரம் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டது.

இநிலையில் குறித்த போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய மேலும் இரு முக்கியஸ்தர்கள் இன்று நீர்கொழும்பில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.