(இராஜதுரை ஹஷான்)
பொதுஜன பெரனமுன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மற்றும் சுதந்திர கட்சியினுடனான புதிய கூட்டணி தொடர்பில் இதுரையில் எவ்விதமான தீர்க்கமான தீர்மானங்களையும் எடுக்கவில்லை.
இரு தரப்பினரும் தங்களின் தனிப்பட்ட கருத்துக்களையே குறிப்பிடுகின்றனர். தனிப்பட்ட கருத்துக்கள் கட்சிக்குள் பாரிய பிளவினையையும், எதிர்கால அரசியல் திட்டங்களுக்கும் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் .
ஆகவே இவ்விடயங்களுக்கு பொதுஜன பெரமுன முன்னணி விரைவில் மாற்று நடவடிக்கையினை முன்னெடுக்கும் என பொதுஜன பெரமுன முன்னணியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் பொதுஜன பெரமுன முன்னணியினர் மத்தியில் காணப்படுகின்ற கருத்து வேறுப்பாடுகள் தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
முரண்படுகின்ற கருத்துக்களுக்கு விரைவில் ஒரு தீர்வு முன்வைக்கப்படும். சுதந்திர கட்சியும், பொதுஜன பெரமுன முன்னணியும் இணைந்து செயற்படுவது வரவேற்கத்தக்கது.
எவ்வாறு இருப்பினும் ஒருபோதும் நாங்கள் புதிய கூட்டணி விடயத்தில் தொடர்ந்து குறிப்பிட்டு வருகின்ற விடயங்களை ஒருபோதும் எவருக்காகவும் விட்டுக் கொடுக்கமாட்டோம். இவ்விடயத்தில் பொதுஜன பெரமுன முன்னணியின் உறுப்பினர்கள் அனைவரும் உறுதியாகவே உள்ளோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM