வட மாகாண சபையின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட கலாநிதி சுரேன் ராகவனுக்கும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்குமிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பு நேற்றையதினம் வடமாகாண ஆளுநருடைய உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

தமிழ் மக்கள் தற்போது எதிர்நோக்கும் அரசியல் மற்றும் அபிவிருத்தி பிரச்சினைகள் இந்த சந்திப்பின்போது விரிவாக கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.