(ஆர்.விதுஷா)

வெயாங்கொடை பகுதியில்  பெண்ணொருவரின் தங்க சங்கிலியை திருடிச் சென்ற  இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

குறித்த கொள்ளை சம்பவம்  நேற்று  முற்பகல்  10.30 மணியளவில்  பதிவாகியுள்ளது.  இல 83  , களகெடிகென வீதி  , வெயான்கொடை  வீதியில் பெண்ணொருவரின் கழுத்திலிருந்த தங்க சங்கிலியொன்றை மோட்டார் சைக்கிளில் பயணித்த  இளைஞர்கள்  இருவர்  திருடிச்சென்றுள்ளனர்.  

அதனையடுத்து  வெயாங்கொடை  பொலிசாருக்கு  அளிக்கப்பட்ட  முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகளை ஆரம்பித்த பொலிசார்,  கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய  சந்தேக நபர்கள் இருவரையும்  கைதுசெய்துள்ளனர்.

அவர்களிடமிருந்து பெண்ணிடத்தில்   திருடப்பட்ட 75 ஆயிரம் ரூபா பெறுமதியான  தங்கச் சங்கிலியையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர். 

சந்தேக நபர்கள் இருவரும்  20 மற்றும்  26 வயதுடைய  மல்வானை  , பியகம  ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. 

இதேவேளை  சந்தேக நபர்கள்  இருவரையும் அத்தனகல நீதவான் நீதிமன்றத்தில்     ஆஜர்படுத்துவதற்கான  நடவடிக்கைகளை வெயாங்கொடை  பொலிசார் மேற்கொண்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.