கொழும்புக்கு கடத்தவிருந்த ஒருதொகையான கேரள காஞ்சாவை யாழில் பொலிஸார் மீட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் வைத்தே குறித்த கேரள கஞ்சாவை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா 96 கிலோ கிராம் நிறையுடையதென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.